Author: வி. ஜெ. சந்திரன்
•1:38 AM
ஈழத்தில் உள்ள கோயில்களை ஆகம விதிக்கு அமைந்த கோயில்கள், ஆகம விதிக்கு அமையாத நட்டு புற கோயில்கள் என இரண்டாக பிரிக்கலாம். எண்ணிகையில் ஆகம விதிக்கு அமையாத கோயில்களே அதிகம் இருக்கும் என நினைக்கிறேன். இவை பொதுவாக குறிப்பிட்ட சில குடும்பங்களின் குலதெய்வ கோயிலாக/ உரித்து கோயிலாக இருக்கும். வைரவர், அண்ணமார், வன்னியர், வீரபத்திரர், காளி, அம்மன், நாகதம்பிரான் போன்ற தெய்வங்களே இப்படியான ஆகம முறைக்கு அமையாத கோயில்களில் குடியிருப்பார்கள். பூசைகளும் வாரத்துக்கு ஒருமுறை/ இருமுறை எந்த மந்திரங்களும் இன்றி கோயிலுக்கு உரித்துடைய குடும்பங்களில் எதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண் பூசகராக இருந்து பூசை செய்வர். இப்படியான கோயில்களில் வருடாந்தம் பொங்கல் நடைபெறும்.

இந்த பதிவில் இப்படியான பொங்கல் நிகழ்வில் நடக்கும் வேறுப்பட்ட சடங்குகள் பற்றி பார்க்கலாம்.

எனது வீட்டுக்கு மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் ஒரு கோயிலில் நடைபெறும் சடங்குகளை அடிப்படையக வைத்தே இந்த பகுதியை எழுதுகிறேன். பல அடிப்படை விடயங்கள் இப்படியான நாட்டு புற கோயில் போங்கல்களில் பொதுவாக இருந்தாலும் வேறுபாடுகள் இருக்க சத்தியம் இருக்கிறது அவற்றை தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இறுதியாக இப்படியான பொங்கலில் கலந்து கொண்டு கிட்டதட்ட 15 வருடங்கள் ஆகிறது.

பொங்கல் சடங்குகள் பொதுவாக மலை 6 மணி போல ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணி போல நிறைவு பெறும். நட்டு சூழ்நிலைகள் காரணமாக எனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கோயிலில் 1995 ஆண்டுக்கு பின் பொங்கல் நடந்ததாக நினைவில்லை.



1 . விளக்கு வைத்தல்

விளக்கு வைத்தல் என்பது பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெறும். அன்றைய தினம் ஏற்றிய விளக்கு பொங்கல் முடியும் வரை அணையாது பேணப்படும்?? விளக்கு வைத்த பின் மலை நேரத்தில்/ இரவில் பெண்கள் மற்றும் சிறுவர்களை கோயிலை சூழ உள்ள இடங்களுக்கு போக கூடாது என்பார்கள். விளக்கு வைத்ததன் பின் குறிப்பிட்ட தெய்வம் கோயிலில் தங்கியிருக்காது இரவு நேரம் வெளியே உலவும் என்பது ஐதிகம் என நினைக்கிறேன். அப்படித்தான் யாரோ சொல்லி எனக்கு நினைவிருக்கிறது. உங்களில் யாருக்காவது வேறு கரணங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

2 . காவடி

பொங்கல் அன்று மலை அபிசேக பூசைக்கு முன்னதாக காவடி எடுக்கும் நிகழ்வு இருக்கும். காவடிகள் எனது விட்டுக்கு அண்மையில் இருக்கும் கோயிலில் பண்டம் எடுக்கும் இடத்தில் இருந்து தொடங்கும். பொங்கல் நிகழ்வுக்கும் காவடிக்கும் பறை மேளமே பயன்படுத்தபடும். காவடி பால் சேம்பு என்பவை கோயிலை அடைந்ததன் பின் அபிசேகம் பூசை என்பன நடைபெறும்.

3 . அபிசேகம்

காவடி, பால்செம்பு போன்றவற்றில் இருந்த பாலை கொண்டு அபிசேகம், பூசை நடைபெறும்.

4 . பண்டம் எடுத்தல்

அபிசேகம், பூசை முடிந்த பின் ஊர்வலமாக பண்டம் எடுக்க செல்வர்கள். இதன் பொது பெரிய திரிசூலம், பிரம்பு, சிலப்பு, இன்னும் சில பெயர் தெரியாத பொருட்களை (தண்டுகள், சலங்கைகள்) கோயிலில் இருந்து பண்டம் வைத்துள்ள இடத்துக்கு எடுத்து செல்வர்கள். பண்டம் எடுக்கும் இடம், கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வெறும் கணியில் பற்றைகளை துப்பரவாக்கி தற்காலிகமாக ஒரு சிறு பந்தல் போட்டிருப்பாருக்கும் இடம். பண்டம் என்பது பொங்கலுக்கு தேவையான போருடகளான அரிசி, வழைப் பழம், வளைந்துப் பனை, போன்றவை ஆகும்.

கோயிலில் இருந்து கொண்டு சென்ற திரிசூலத்தை பந்தலின் முன்னால் நடுவார்கள், பிரம்பு, மற்றைய பொருட்களை பந்தலில் வைத்து பூசை செய்வார்கள். இதன் பொது நன்கு பெண்களும் , பூசகர் உட்பட மூன்று ஆண்கள் சிலரும் உரு வந்து ஆட தொடங்குவார்கள். பூசகர் உரு ஆடும் பெண்களுக்கு சிலம்பு, பிரம்பு போன்ற பொருட்களை கொடுப்பார். ஒவ்வொரு வருட பொங்கலிலும் குறிப்பிட்ட பெண் சில குறிபிட்ட பொருட்களையே (சிலப்பு, பிரம்பு/ சலங்கை, தண்டு??) பெறுவார். பின் பூசகர் பண்ட பொருட்களை வளந்து வைக்கும் உரித்து உடையவர்களிடம் கையளிப்பர். திரிசூலம் முன்னே செல்ல உரு ஆடுபவர்கள், பண்ட பொருட்களை கொண்டு செல்பவர்கள் அதை தொடருவார்கள். (உரு ஆட்டம் காவடியின் போதும், அபிசேகத்தின் போதும் இருக்கும் ஆனால் உரு ஆடுபவர்களுக்கு எந்த விசேட பொருட்களும் கொடுக்கப்பட மாட்டாது.) பண்ட பொருட்கள் கோயிலை அடைந்ததும், உரு ஆடுபவர்களுக்கு பூசகர் நீர் தெளித்து உரு ஆட்டத்தை நிறுத்துவார். திரிசூலம் கோயிலின் வாசலின் ஊன்றப்படும். பண்ட பொருகள் பொங்கலுக்கு தயாராக ஒழுங்கு படுத்தி வைப்பார்கள். அத்துடன் பூசை ஓய்வுக்கு வரும்.

பண்டம் எடுக்கும் இடம் : இது கோயிலுக்கு கோயில் வேறுபாடும். வன்னியில் இருக்கும் புளியம் பொக்கணை நாகதம்பிரான் கோயில் (என்று தான் நினைக்கிறேன், இல்லை என்றால் சொல்லவும்) பொங்கலுக்கு யாழ் குடாவில் இருக்கும் எனது ஊரில் இருந்து தான் பண்டம் எடுத்து செல்வர்கள். இந்த பண்டம் எடுப்பு பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக நடக்கும் என நினைக்கிறேன்.

5 . உரு ஆடுதல்

பொங்கல், மற்றும் விசேட பூசை தினக்களில் ஆண்கள், மற்றும் பெண்கள் தெய்வங்களால் ஆட்கொள்ள பட்டு ஆடுவதை குறிக்கும். இதற்கு பேச்சு வழக்கில் பேயாட்டம் , கலை வந்து ஆடுதல், சாமி ஆடுதல் என பல பெயர்கள் உண்டு. எனது வீட்டுக்கு அண்மையாக உள்ள கோயிலில் உரு ஆடும் எவரும் கட்டு சொனதாக ஞாபகம் இல்லை. ஆனால் வேறு சில கோயில்களில் உரு ஆடுபவர்கள் கட்டு/ அருள் வாக்கு சொல்வார்கள். உரு ஆடுபவர்கள் எண்ணிக்கை கோயிலுக்கு கோயில் வேறுபாடும்.

6 . வளந்து வைத்தல்/ பொங்கல்

பொங்கல் நாளில் போங்க பயன்படும் பனையை வளந்து பனை என்று சொல்வார்கள். வளந்து பனை நன்கு தொடக்கம் ஐந்து கொத்து அரிசி ( 1 கொத்து என்பது 4 சுண்டு, 1 சுண்டு என்பது மில்க் மெய்ட் பால் பேணியின் கொள்ளளவு) அவிய கூடிய இதற்கென்றே சிறப்பாக செய்யபடுகிற பெரிய பனையாகும். ஆனால் காலப்போக்கில் இந்த பனையின் அளவு சிறிதாகி விட்டது. வளந்து வைப்பவர்கள் கோயிலின் உரித்துகாரர் ஆக இருப்பார்கள்.

பண்டம் எடுத்து வந்ததன் பின் ஓய்வுக்கு வந்த பூசை அதிகாலை 4 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகும். வளைந்து பனையை உருவந்த பூசகர் உரித்து காரர்களிடம் கொடுப்பார். அதே நேரம் ஏனைய உரு ஆடுபவர்களும் உரு ஆடுவார்கள். பொங்கல் பொங்கி சூரியன் உதிக்கும் போது படையலுக்கு தயாராகிவிடும்.

பொங்கல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

7 . எட்டம் மடை / வைரவர் மடை

இது பொங்கல் நடந்து 3 நாள் அல்லது எட்டம் நாள் நடைபெறும். எட்டம் மடை எனும் பெயர் எட்டம் நாள் நடைபெறுவதால் தான் வந்தது என நினைக்கிறேன்.

எட்டம் மடை முடியும் வரை கோயில் வாசலில் ஊன்றப்பட்ட திரிசூலம் அப்படியே இருக்கும்.
எட்டம் மடைக்கு மோதகம், பொங்கல், வடை முறுக்கு என பலதரப்பட்ட பொருட்களும் செய்யப்பட்டு மடை வைக்கப்படும்/ படைக்கப்படும்.

பூசை, அபிசேகம் போன்றவற்றின் பொது உரு ஆட்டமும் இருக்கும். பூசை, பொங்கல் சடங்கை முடித்து வைக்கும் இறுதி சடங்காக வழி வெட்டல் நடைபெறும் (வழி வெட்டல் பொங்கல் அன்றும் இருக்குமா? எனக்கு சரியாக ஞாபகம் இல்லை).
பூசை முடிந்ததும் மடை பிரசாதம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

8 . வழி வெட்டுதல்

இதன் பொது கோயில் வாசல், கோயிலிற்கு பண்டம் எடுத்து வந்த பாதையில் உள்ள நாற்சந்தி ஆகியவற்றிற்கு திரிசூலத்தை எடுத்து சென்று முன்று இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டுவார்கள். வெட்டுவதற்கு முன் பூசகர் உறுவது கத்தியை கொண்டு நன்கு திசைகளையும் நோக்கி வெட்டுவது போல் அபிநயம் செய்து கத்தியை இன்னும் ஒருவரிடம் கொடுப்பார். வேண்டியவர் இளனி, பூசணிக்காய் என்பவற்றை வெட்டி பிளப்பார். இந்த சடங்கு வெளியே உலவ வெட்ட தெய்வத்தை மீளவும் கோயிலில் இருத்தி வைக்க ?? செய்ப்படுகிறது என நினைக்கிறேன். திரிசூலம் மீளவும் கோயிலின் உள் எடுத்துசெல்லப்பட்டு விடும்.




இப்படியான பொங்கல் நிகழ்வின் பொது சில கோயில்களில் ஆடு, கோழி என்பவற்றை பலியிடும் வழக்கம் இருக்கிறது. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கோயிலில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எந்த விலங்கும் பலியிடப்படவில்லை. முன்னரும் பலியிட்டதாக எனது வீட்டில் யாரும் சொன்னதாக ஞாபகம் இல்லை.
This entry was posted on 1:38 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On March 8, 2011 at 3:33 PM , கானா பிரபா said...

வி.ஜே. மிகவும் விரிவான பதிவு, ரசித்தேன்

 
On March 9, 2011 at 6:36 AM , கலை said...

எங்கட வைரவர் கோவில் பொங்கலும் நினைவுக்கு வருது. அடுத்த நாள் காலை பொங்கல் என்றால், முதல் நாள் காலையிலேயே கோவிலுக்குப் போய் அன்று பகல் அன்னதானமும் செய்யப்படும். பின்னேரமா வடை, மோதகம் எண்டு எல்லாம் செய்யத் தொடங்கினால், பொங்கலன்று காலையில எல்லாம் செய்து முடிச்சு பொங்கலும் நடக்கும்.

 
On March 10, 2011 at 6:42 AM , வடலியூரான் said...

எனக்கும் ஞாப்கங்களைக் கிளறி விட்டீர் தோழரே.எல்லாச் சடங்கும் நானும் எங்களூரிலே பார்த்திருக்கின்றேன்.ஒன்றையும் விடாமல் விலாவாரியாகச் சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

 
On March 10, 2011 at 9:37 AM , வி. ஜெ. சந்திரன் said...

கானா பிரபா , கலை அக்கா, வடலியூரான் உங்கள் கருத்துக்கு நன்றி.

 
On March 10, 2011 at 1:51 PM , வந்தியத்தேவன் said...

ஒருகாலத்திலை பெலி(பலியைத் தான் இப்படிச் சொல்வார்கள்)கொடுத்து ஆடுவெட்டி கோழிவெட்டி வழிபாடு செய்தமக்கள் பின்னர் அதனையே பொங்கல் திருக்குளிர்த்தி வேள்வி என பலபெயரால் கொண்டாடுகின்றார்கள். பொங்கல் மோதகம் வடை எல்லாத்தையும் ஒண்டாக குழைச்சுப்போட்டு சாப்பிடுவது தனிச் சுவைதான். ம்ம்ம் இதையெல்லாம் அனுபவிச்சுப் பல வருசமாச்சு.

 
On March 10, 2011 at 2:10 PM , யசோதா.பத்மநாதன் said...

சிறு தெய்வ வழிபாடு பற்றிய நல்ல தெளிவான பதிவு. பதியப் பட வேண்டிய குறிப்பும் கூட. இப்போது இப்படியான கோயில்கள் அருகிவிட்டனவோ?

நயினாதீவு நாகபூசனி, பன்றித்தலைச்சி அம்மன்,முள்ளியவளை வற்றாப்பளை அம்மன்,மட்டக்களப்பில் கண்ணகி அம்மன் ஒரு பாதையால் நடந்து சென்று தங்கிய இடங்கள் என்றும் எங்கோ பார்த்திருக்கிறேன்.

கருணைக்கும் கோபத்துக்கும் இத்தெய்வங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.இவை பற்றியும் அறிய முடிந்தால் நன்றாக இருக்கும்.

கூடவே மடு மாதா பற்றியும்.

பதிவுக்கு நன்றி வி.ஜெ.