Author: `மழை` ஷ்ரேயா(Shreya)
•3:02 AM
உங்களுக்கு ஒதிய மரத்தைப் பற்றித் தெரியுமா? கண்டிருக்கிறீர்களா? (மரங்களைப் பற்றித் தொடர் போல ஆரம்பித்த வசந்தனுக்குத் தெரிந்திருக்கக்கூடும்)

நெடு நெடுவென்று வளருமாம்.. ஆனால் யாருமே இந்த மரத்தில் ஏற மாட்டார்களாம். ஏனா? ஏறினால் பலமில்லாத மரத்துக் கொப்பு முறிஞ்சு ஆள் கீழ மண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பார். கை கால் மேலெல்லாம் நோக, நகர இயலாமல் விழுந்து கிடப்பராம்.

அதனாலேயே ஆகவும் ஏலாமல் சவண்டு போய்க் கிடப்பவர்களைக் கண்டால் 'என்னடா ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரிக் கிடக்கிறா?" என்று 'அன்பாக' விசாரிப்பார்களாம் ஊரவர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்.. "ஒடியும் மரம்" தான் பேச்சு வழக்கில் ஒதிய மரம் என்று ஆனதா?

அ.பொ.சொ.வி:

கொப்பு - கிளை
மேல் - மேனி
ஆகவும் - அதிகமாக (ரொம்ப)
ஏலாமல் - இயலாமல் / முடியாமல்
சவண்டு -சோர்ந்து
This entry was posted on 3:02 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On December 16, 2009 at 7:05 AM , வர்மா said...

ஒதியமரத்திலைதான் பொன்வண்டு இருக்கும்.அதன் பெயரே ஒதியமரம்தான் சந்தேகம் வேண்டாம்
அன்புடன்
வர்மா

 
On December 16, 2009 at 8:46 AM , வந்தியத்தேவன் said...

எனக்கும் ஒதி என்றால் நினைவுக்கு வருவது பொன்வண்டுதான். சின்னனில் நான் பொண்வண்டு பிடித்து நெருப்புப் பெட்டிக்குள் அடைத்துவைத்து அதற்க்கு ஒதியமிலைகளை சின்னச் சின்னத் துண்டாக கிழித்துப்போடுவது.

 
On December 16, 2009 at 9:30 PM , `மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஓ!!! பொன்வண்டு!!! கண்டு கனகாலம்.

ஒதிய மரத்து இலையிட காம்பை 3/4 அளவு முறிச்சு bubble ஊதலாமோ? ஏனென்டா அப்பிடி நாங்கள் செய்து விளையாடுற இலையுள்ள ஒரு மரத்திலதான் நான் பொன்வண்டைக் கண்டிருக்கிறன்.

 
On December 16, 2009 at 10:26 PM , சந்தனமுல்லை said...

கேள்விப்பட்டிருக்கிறேன்...ஒதிய மரம்!அப்புறம் பொன்வண்டு - அதை காலி வத்திப்பெட்டிக்குள்ளே போட்டு இலை, வைக்கோல் எல்லாம் போட்டு கண்ணும் கருத்துமா கவனிச்சிப்பாங்க! :-))))

 
On December 18, 2009 at 10:44 PM , யசோதா.பத்மநாதன் said...

வரவுக்கு வாழ்த்துக்கள்!

எனக்கு அந்த மரத்தைப் பற்றித் தெரியவில்லை.ஆனால் 'ஒதிய மரத்தால விழுந்தவன் மாதிரி' என்று ஒரு புது மரபுத் தொடர் ஒன்று இப்பாது அறிந்து கொண்டேன்.

மகிழ்ச்சி:தொடர்ந்து எழுதுங்கள்!

 
On April 22, 2010 at 7:19 AM , Pragash said...

ஒதியமரத்துக்கும் இந்த பழமொழிக்கும் தொடர்பில்லை. 'ஒடியிற மரத்தாலை விழுந்தவன் மாதிரி' இது மருவி ஒதிய மரமாக மாறிவிட்டது. உறவினரின் இறைப்புக்கு பாவிக்கும் தோட்ட கிணற்றில் துலா அச்சை தாங்குவது வி வடிவ கெவர் உள்ள இரண்டு வலுவான ஒதியமரங்கள் என்பதாக எனது நினைவில் உள்ளது. பூவரச மரங்களும் அதிகம் பாவிப்பதுண்டு. பொன்வண்டு இலந்தை மரத்திலும் இருப்பதுண்டு. எப்படியோ இளவயது இனிமை நிறைந்த காலங்களை மீட்டிப்பார்க்க வாய்ப்பளித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்.