Author: வந்தியத்தேவன்
•11:52 AM
தேரேறி வருகிறார் வல்லிபுர ஆழ்வார்
கோவிந்தா கோவிந்தா இராஜகோபுரம்
அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களும் சாரணனும்
பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் தீர்க்கும் அடியவர்
முதல் வணக்கம் எங்கள் கணபதிக்கே
கடல்தீர்த்தமாட வங்கக்கடலை நோக்கிச் செல்லும் பாதை
இராவணன் மீசை கிடக்கும் புல்வெளி
இன்னொரு அழகிய காட்சி
தீர்த்தக் கரையை நெருங்கிவிட்டார்கள்
நீண்ட நாட்களின் பின்னர் மக்களைக் கண்ட மணல்
தீர்த்தமாடும் இளைஞர்கள் சிறுவர்கள்
நாங்களும் காலம் காலமாக நீந்திய கடல்
கடலில் குதிக்க பிரமிட் கட்டும் இளம் கன்றுகள்
ஆஞ்சனேயர் தீர்த்தமாட அருள்பாலிக்கும் விநாயகர், சக்கரத்தாழ்வார்,லக்ஸ்மி
வருடத்தில் ஒருநாள் மக்களைக் காணும் அழகிய மணல்
தூரத்தில் சிறிதாகிப் போன மணல் கும்பி.
இரவில் இராஜகோபுரம்
ரம்மியமான மாலைக் காட்சி
வங்கக் கடலில் அஸ்தமிக்கும் சூரியன்

நன்றிகள் : மூஞ்சிப்புத்தகத்தில் இருந்தபடங்களை இங்கே பதிக்க அனுமதிகொடுத்த நண்பன் நந்தரூபன் லோகநாதனுக்கு நன்றிகள்.

1996ன் பின்னர் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பைக் கொடுக்காத ஆண்டவனுக்கும் ஆண்டவர்களுக்கும் கண்டனங்கள்.
This entry was posted on 11:52 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On October 4, 2009 at 12:13 PM , ப்ரியமுடன் வசந்த் said...

அழகான கட்சிகள்....

 
On October 4, 2009 at 12:25 PM , பிருந்தன் said...

அது ஒரு கனா காலம் ம்ம்ம்.....................

 
On October 4, 2009 at 12:27 PM , ப்ரியமுடன் வசந்த் said...

கோவிலும் தேரும் சேர்ந்த காட்சிகள் இதமாய் இருக்கு...

 
On October 4, 2009 at 12:29 PM , பிருந்தன் said...

போர் சப்பி துப்பிய என் வாழ்வு, புலத்தில்தானோ எனது சாவு...........:-((((((((

 
On October 4, 2009 at 1:41 PM , யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆண்டவனுக்கும் ஆண்டவர்களுக்கும் கண்டனங்கள்.//
அருமை!
அழகான படங்களைப் பகிர்ந்ததற்கு
நன்றி!

 
On October 4, 2009 at 1:44 PM , ஆ.ஞானசேகரன் said...

ம்ம் நல்ல அழகு

 
On October 4, 2009 at 1:52 PM , Elanthi said...

ம்ம்ம்.... படங்களை பார்க்கவே இனம்புரியாத சந்தோஷம் ஏக்கம். அந்த மணலில் சறுக்கி விளையாட எப்போ எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமோ?
நன்றி அண்ணா.

 
On October 5, 2009 at 12:07 AM , கரவைக்குரல் said...

படங்களைப்பகிர்ந்து எம்மை வல்லிபுரத்துக்கே அழைத்துச்சென்றுவிட்டீர்கள் வந்தியாரே
நன்றி

 
On October 5, 2009 at 2:54 AM , கானா பிரபா said...

வல்லிபுர ஆழ்வாரிடம் இன்னும் போகவில்லை அடுத்த ஆண்டாவது கிட்டவேண்டும்.

படங்கள் அழகு, இதெல்லாம் எங்கட ஊரில் இருக்கு என்பதை நினைக்கும் போதும் பெருமை

 
On October 5, 2009 at 3:29 AM , கலையரசன் said...

சூப்பராயிருக்கு புகைப்படங்கள்! பகிர்ந்தமைக்கு நன்றிங்கண்னோவ்!!

 
On October 15, 2009 at 10:10 PM , Anonymous said...

நாங்கள் 95 தை மாசம் போன போது இப்படி பெயின்ட் எல்லாம் அடிச்சு இருக்கேல. என்ன தான் சொல்லுங்கோ, பெயின்ட் அடிக்காத கோயிலின்ட வடிவு இதில் இல்லை. மணற்காடு கடல் சரியான பெரிய அலைகளை கொண்டது அல்லவா. எப்படி தீர்த்தம் ஆடினம்? கடலில் நீந்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்டு. அதுவும் அலைகளில் புகுறது என்டால் சரியான புளுகு தான். ஆனாலும் மணற்காட்டு அலைகள் என்னை சரியா பயமுறுத்திப்போட்டின. ஒரு தரம் அலைக்குள் புக வெளிக்கிட்டு நல்லா சுருட்டி அடிச்சுப் போட்டுது. வெளிய வந்து அம்மாட்ட கேட்டனானாம், யார் நீங்கள் என்டு.

அந்த கடற்கரையில் போய் இருந்து கதைப்பதுப் பிறகு கிட்ட இருக்கிற பாழடைஞ்ச திறந்த மண்டபத்தில் புளியாணமும் சூடை மீன் பொரியல் சாப்பிடுவதும் எங்களுக்குப் பிடித்தமான பொழுது போக்கு. யாழ்ப்பாணத்தில் இருந்து, நாங்களும் மாமா குடும்பமும் வருசத்தில் 4 தடவையாவது போவோம்.

எனக்கு பிடித்தது... தைமாசம் தான். பயங்கர அலைகளைப் பார்க்கும் போது நானும் பூங்குழலி மாதிரி (பொன்னியின் செல்வன் கதாபாத்திரம்) சிரிப்பேனாம். அம்மா சொல்லுவா... இப்பவும் கண்ணில் அந்த அலைகள் நிற்கின்றன. கிட்ட இருக்குற மண்டபத்தின் படத்தைக் கிடைச்சால் தயவு செய்து அனுப்புங்கோ. நன்றி.

கானா பிரபா அண்ணா, நீங்களும் வடமராட்சியே? சந்தோசம்.

இந்த வெத்து வேட்டு நாய் இங்கயும் வருதே.. அந்த நாயுக்கு வேற வேலையே இல்லையே.. சனியன். அதின்ட தலையில இடி விழ...
‍-Triumph aka Mukilini

 
On October 16, 2009 at 1:24 AM , கானா பிரபா said...

வணக்கம் முகிலினி

பதிவுக்கு சொந்தக்காரர் வந்தியத்தேவன் அடிக்க வந்திடுவார் ;) அவர் தான் வடமாராட்சி. நான் இணுவிலான்.

நீங்கள் சொன்ன அந்த ஈனப்பிறவியின் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்,

 
On December 12, 2009 at 12:50 AM , Vijay said...

ஞாபகங்களை கிளறும் அருமையான புகைப்படங்கள், பகிர்ந்தற்கு நன்றி. பணத்தாசை பிடித்த எம்மவர்களில் சிலரால் மணற்குன்றுகள் காணாமல் போயிருப்பதைப் பார்க்க கவலையாக உள்ளது. இறுதிப் புகைப்படத்தில் "வங்கக் கடலில் அஸ்தமிக்கும் சூரியன்" என்று எழுதியிருப்பது தவறு. வங்கக்கடல் கிழக்குப்பக்கமாக இருக்கிறது.