Author: யசோதா.பத்மநாதன்
•4:33 PM
எக்கச்சக்கமான(பெருமளவு)மரபுத் தொடர்களும் பழமொழிகளும் ஈழத் தமிழர் வாழ்வில் வழங்கி வருகின்றன.சில காலப் போக்கில் வழக்கொழிந்து போயின.பல இன்றும் இனியும் வழங்கி வருதல் கூடும்.அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப் படும் இப்பழமொழிகள் மூலமாக உலகத்தை உள்ளங்கையில் பரிசளித்து விட்டுப் போனார்கள் நம் முன்னோர்.பாரம்பரியங்களும் வாழ்க்கை முறைகளும் வாழ்வியல் சித்தாந்தங்களும் இவற்றினூடாகவும் அடுத்த பரம்பரைக்குக் கைமாறின.





எனக்குத் தெரிந்தவையும் அறிந்தவையும் இதில் இடம் பெறுகின்றன. எனக்குத் தெரியாத நானறியாத எத்தனையோ பழமொழிகள், மரபுத் தொடர்கள் இன்னும் உள்ளன.'ஊர்கூடித் தேர் இழுப்போம்' வாருங்கள்.உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.



விளையும் பயிரை முளையிலே தெரியும்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

போதுமென்ற வாழ்வே பொன்செய்யும் மருந்து

ஒரு மரம் தோப்பாகாது

பேராசை பெரு நட்டம்

பாவிகள் போகுமிடம் பள்ளமும் திட்டியும்

காதலுக்குக் கண்ணில்லை

புத்திமான் பலவான்

தாயின் வளர்ப்பு பிள்ளையில் தெரியும்

கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசேல்

யார் இடித்தால் என்ன?அரிசியானால் சரி

வெச்சாக் குடுமி; அடிச்சா மொட்டை

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்

காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்

காசைக் கொடுத்து ஆளை அறி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நெருப்புக்குள் விழும் விட்டில்கள் போல

முயற்சி திருவினையாக்கும்

காலம் கடந்த ஞானம்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

தன் முதுகு தனக்குத் தெரியாது

கற்றோரை கற்றோரே காமுறுவர்

எண்சாணுடம்புக்கும் சிரசே பிரதானம்

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்

பெற்றமனம் பித்து; பிள்ளைமனம் கல்லு

தலையிடியும் காச்சலும் தனக்குத் தனக்கு
வந்தால் தான் தெரியும்

குழந்தைக்கும் குட்டி நாய்க்கும்
இடம் கொடுக்கக் கூடாது

நேற்றுப் பெய்த மழைக்கு
இன்று முளைத்த காளான்

எறும்பும் தன் கையால் எண்சாண்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

ஆப்பிழுத்த குரங்கு போல

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்

ஆழம் அறியாமல் காலை விடாதே

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

பாம்பின் கால் பாம்பறியும்

தன் கையே தனக்குதவி

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற் போல

காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தாற் போல

காகம் திட்டி மாடு சாகாது

காட்டில் எறித்த நிலா போல

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

குரைக்கிற நாய் கடிக்காது

கரும்பு தின்னக் கூலியா

ஆசை வெட்கம் அறியாது

இனம் இனத்தைச் சேரும்

ஆனைக்கும் அடிசறுக்கும்

ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்

அடியாத மாடு படியாது

பதறிய காரியம் சிதறும்

ஆடுற மாட்டை ஆடிக் கற
பாடிற மாட்டைப் பாடிக் கற

தன் வினை தன்னைச் சுடும்

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்

தாமரை இலைத் தண்ணீர் போல

வினை விதைத்தவன் வினையறுப்பான்
திணை விதைத்தவன் திணையறுப்பான்

நன்றும் தீதும் பிறர் தர வரா

இறைக்கும் கிணறு ஊறும்
இறையாக் கிணறு நாறும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

காலமறிந்து பயிர் செய்
வேளையறிந்து வினை செய்

இளமையில் கல்வி சிலையில் எழுத்து

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டாற்போல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மின்மினிப் பூச்சிகள் விளக்கல்ல

பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்

எட்டாப் பழம் புளிக்கும்

கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு

கண்டதும் காதல்;கொண்டதே கோலம்

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்

களவும் கற்று மற

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுமாப்போல

ஒரு சாண் ஏறி ஒரு முழம் சறுக்குமாப்போல

கல்லில நார் உரித்தாற்போல

கல்லுக்குள்ளும் ஈரமுண்டு

மழை,கார் இருட்டானாலும்
மந்தி கொப்பிழக்கப் பாயாது

சுட்டாலும் தங்கம் கறுக்காது
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

கிட்டாதாயின் வெட்டென மற

ஊரோடு ஒத்தோடு

புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

சாடிக் கேற்ற மூடி

தாயைப் போல பிள்ளை;நூலப் போல சேலை

தனக்குத் தனக்கென்றால்
சுளகு படக்கு படக்கு எண்ணுமாம்

ஆனை வரும் முன்னே
மணியோசை வரும் பின்னே

பூனைக்கு மணி கட்டுவது யார்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

ஆபத்துக்குப் பாவம் இல்லை

கெடுகுடி சொற் கேளாது

இக்கரைக்கு அக்கரை பச்சை

எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றினாற் போல

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

வழித் தேங்காயை எடுத்துத்
தெருப்பிள்ளையாருக்கு உடைத்தாற் போல

ஊராவீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

கழுதை அறியுமா கற்பூர வாசனை?

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

நெருப்பென்றால் நாக்கு வெந்து போகாது

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

தானம் கொடுத்த மாட்டில் பல்பிடித்துப் பார்க்காதே

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும்

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்

பொறுத்தார் பூமியாள்வார்

வெளுத்ததெல்லாம் பாலா?

வெள்ளம் வருமுன் அணை கட்டு

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

வேண்டாப் பெண்டாட்டி
கை பட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம்

நல்ல குருநாதர் நம்மைக் வருத்துவது
கொல்லவல்ல;கொல்லவல்ல
பொல்லா வினையறுக்க.

பட உதவி; நன்றி; இணையம்
|
This entry was posted on 4:33 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On July 20, 2009 at 6:42 PM , வந்தியத்தேவன் said...

வடலி வளர்த்துக் கள்ளுக்குடித்தல்.

அப்படியே இவற்றின் அர்த்தங்களையும் சொன்னால் நல்லது. இவற்றில் பல தமிழகத்திலும் வழக்கில் உள்ளவை என நினைக்கின்றேன்.

 
On July 20, 2009 at 6:53 PM , சினேகிதி said...

மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம்??? இது நான் கிட்டடில கேள்விப்பட்டது இதுவரைக்கும் கேள்விப்படேல்ல.

மன்னார்ல பாவிக்கிறதாம் இந்தப் பழமொழி.

 
On July 20, 2009 at 7:47 PM , தமிழ் said...

/
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு/

விளக்கம் தந்தால் பயன் உள்ளதாக
இருக்கும்

 
On July 20, 2009 at 8:54 PM , வாசுகி said...

பயனுள்ள விசயம் சொல்லியிருக்கிறீங்கள்.


1.குடிப்பது கஞ்சி கொப்பளிப்பது பன்னீர்.
2.அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
3.ஆத்தில(ஆறு) போட்டாலும் அளந்து போடு.
4.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
5.ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
6.கந்தையானாலும் கசக்கி கட்டு.
7.புலிக்குப் பிறந்தது பூனையாகுமா
8.குரைக்கிற நாய் கடிக்காது
9.தருமம் தலை காக்கும்
10.கடுகு சிறி்தென்றாலும் காரம் பெரிசு.


"அவளைத் தொடுவானேன் கவலைப்படுவானேன்."
"ஒன்றும் தெரியாத பாப்பா கதவுக்கு போட்டாளாம் தாள்ப்பா".

 
On July 20, 2009 at 9:19 PM , வாசுகி said...

//ஆனை வரும் முன்னே
மணியோசை வரும் பின்னே//

ஆச்சி,
ஆனை வரும் "முன்னே" என்று வராது என நினைக்கிறேன்.
மாறி வர வேண்டும்

ஆனை வரும் "பின்னே" மணியோசை வரும் "முன்னே".


அதே போல
"கேடு வரும் பின்னே மதிகெட்டு வரும் முன்னே"
என்றும் சொல்வார்கள்.
****************

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

 
On July 21, 2009 at 1:54 PM , வி. ஜெ. சந்திரன் said...

//மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம்??? //
இது யாழ்ப்பாண பகுதியிலும் புழக்கத்தில் உள்ள பழமொழி??


//அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு/

விளக்கம் தந்தால் பயன் உள்ளதாக
இருக்கும்

July 20, 2009 //

அடம்பன் கொடி என்பது ஒரு படர்ந்து வளரும் ஒரு தாவரம்/ கொடி.
இதன் தண்டு பலம் அற்றது, சிறிய விசையை கூட தாங்கும் சக்தியற்றது. ஆனால் அதே பல அடம்பன் கொடிகள் ஒன்று சேர்ந்து கயிறு போல திரண்டு இருந்தால் அதனை அறுப்பது/ உடைப்பது சிரமம்.
அதே போல ஒரு தனி நபர் பலமற்றவராக இருக்கலாம், ஆனால் பலமற்ற பலரும் சேரும் போது பலம் அதிகரிக்கும்.

http://tamilanmanian.wordpress.com/2009/03/04/

எனக்கு தெரிந்த சில

1. தனக்கு தனக்கெண்ட சுளகும் படக்கு படகெண்டுமாம்
2. தனக்கட சிங்களம் பிடரிக்கு சேதம்
3. காய்த்த மரம் தான் கல்லேறி பெறும்
4. அற்பனுக்கு பவிசுவந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்

 
On July 22, 2009 at 3:16 AM , யசோதா.பத்மநாதன் said...

வந்தி,நாங்கள் இவற்றைக் கலைக் களஞ்சியமாக வடிவமைக்கிறபோது அவற்றின் அர்த்தங்களைச் சந்தர்ப்பம் கூறி விளங்க வைப்போம்.கலைஞர் கருணாநிதியின் குறளோவியம் மாதிரி.

வடலி வெளியீடாகக் கூட அதனைக் கொண்டு வரலாம் வந்தி.ஆனால் என்ன வடலி வளர்ந்து பனையாகிப் பயன் தரும் வரைக் காத்திருக்க வேண்டும்.:)

 
On July 22, 2009 at 3:26 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி சினேகிதி.

திகள்மிளிர், சந்திரன் சொன்னது போல் ஒரு நீளக் கொடியாக அது படரும்.பல கொடிகளைச் சேர்த்துப் பிடித்திழுத்தால் அதனை அறுக்க இயலாது.போர்க் காலங்களில் (கயிறுகள் இல்லை;வசதியும் இல்லை)விறகு விற்பவர்கள் விறகுகளைக் கூட இந்த அடம்பன் கொடியால் சுற்றிக் கட்டி வந்தார்கள்.அத்தனை பலம் பொருந்தியது.

ஒற்றுமையாக இருந்தால் அடம்பன் கொடி மாதிரி மிடுக்காக இருக்கலாம் என்பது அதன் அர்த்தம்.(யாராலும் அசைக்க முடியாது)

உங்கள் ஆர்வம் மகிழ்வூட்டுகிறது. ஏதேனும் சந்தேகம் தோன்றினால் தயங்காமல் கேளுங்கள்.

 
On July 22, 2009 at 3:31 AM , யசோதா.பத்மநாதன் said...

நன்றி வாசுகி பல பழமொழிகளைத் தந்திருக்கிறீர்கள்.

நீ சொன்னது மெத்தச் சரியடி மோன.ஆச்சிக்கு வயசு போட்டுது தானே தங்கம். இப்பிடித்தான் மறதிக் கேடு வரும். என்ர பிள்ளயள் இருக்கேக்க எனக்கென்ன குறை ஆ?

நன்றி சந்திரன்.

 
On July 22, 2009 at 4:26 AM , தமிழ் said...

/மணிமேகலா said...

நன்றி சினேகிதி.

திகள்மிளிர், சந்திரன் சொன்னது போல் ஒரு நீளக் கொடியாக அது படரும்.பல கொடிகளைச் சேர்த்துப் பிடித்திழுத்தால் அதனை அறுக்க இயலாது.போர்க் காலங்களில் (கயிறுகள் இல்லை;வசதியும் இல்லை)விறகு விற்பவர்கள் விறகுகளைக் கூட இந்த அடம்பன் கொடியால் சுற்றிக் கட்டி வந்தார்கள்.அத்தனை பலம் பொருந்தியது.

ஒற்றுமையாக இருந்தால் அடம்பன் கொடி மாதிரி மிடுக்காக இருக்கலாம் என்பது அதன் அர்த்தம்.(யாராலும் அசைக்க முடியாது)

உங்கள் ஆர்வம் மகிழ்வூட்டுகிறது. ஏதேனும் சந்தேகம் தோன்றினால் தயங்காமல் கேளுங்கள்.
/

சொற்களைச் சேர்த்துக் கொண்டுள்ளேன்.
அதனால் தான்

மிக்க நன்றி
சந்திரன் அவர்களே

 
On July 22, 2009 at 6:53 AM , வந்தியத்தேவன் said...

//தனக்கடங்காச் சிங்களம் பிடரிக்கு சேதம்//

சந்திரன் இந்தப்பழமொழி சூப்பர். மொழி தெரியாமல் அல்லது அரைகுறையாகத் தெரிந்து கஸ்டப்பட்டவர்களின் கதைகள் பல அறிந்திருப்பீர்கள். சிங்களம் மட்டுமல்ல பிரெஞ்ச், ஆங்கிலம், டொச் என சகல அன்னிய மொழிகளும் அரைகுறையாக பேசினால் பிடரிக்கு மட்டுமல்ல ஆளுக்கே சேதம்.

 
On July 22, 2009 at 6:55 AM , வந்தியத்தேவன் said...

/மணிமேகலா said...
வந்தி,நாங்கள் இவற்றைக் கலைக் களஞ்சியமாக வடிவமைக்கிறபோது அவற்றின் அர்த்தங்களைச் சந்தர்ப்பம் கூறி விளங்க வைப்போம்.கலைஞர் கருணாநிதியின் குறளோவியம் மாதிரி.

வடலி வெளியீடாகக் கூட அதனைக் கொண்டு வரலாம் வந்தி.ஆனால் என்ன வடலி வளர்ந்து பனையாகிப் பயன் தரும் வரைக் காத்திருக்க வேண்டும்.:)//

கட்டாயம் ஆச்சி. நாங்கள் கொஞ்சம் முயற்சி செய்தாலே வடலி கெதியாக வளர்ந்து பனையாக மாறிவிடும். கலைக்களஞ்சியத்தை அமைக்கும்போது சகலதையும் உள்ளடக்கவேண்டும். பெரிய முயற்சி ஊர் கூடித் தேர் இழுப்போம் வரலாற்றில் பேரெடுப்போம் எம் தமிழை நாம் வளர்ப்போம்.

 
On July 23, 2009 at 5:06 AM , Anonymous said...

யோவ்!!!

இதுக்குள்ள ஏனப்பா கருணாநிதியை இழுக்கிறியள்?

அந்தாளை விட்டிட்டு ஒரு வேலையக்கூட உங்களால செய்யேலாமக் கிடக்கு.

அற்பனுக்குப் பவிசு வந்தால்... எண்டுவாறதின்ர கருத்தில இன்னொண்டும் இருக்கு.

சந்தனம் மெத்தினா எங்கயோ தடவிறது.

-கொண்டோடி

 
On July 23, 2009 at 6:02 AM , யசோதா.பத்மநாதன் said...

// கலைக்களஞ்சியத்தை அமைக்கும்போது சகலதையும் உள்ளடக்கவேண்டும். பெரிய முயற்சி ஊர் கூடித் தேர் இழுப்போம் வரலாற்றில் பேரெடுப்போம் எம் தமிழை நாம் வளர்ப்போம்.//

நிச்சயமாக வந்தி! அதிலென்ன சந்தேகம்?"ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின்" இல்லையா?

ஒரு நாள் இந்தக் கனவு நனவாகும்.நனவாக வேண்டும்.

 
On July 23, 2009 at 6:07 AM , யசோதா.பத்மநாதன் said...

கொண்டோடி,

உந்தக் கதையள விட்டிட்டு நீங்களும் வந்து வடத்தப் பிடியுங்கோ.வாங்கோ!

எப்ப நீங்கள் பதிவு போடப் போறியள்?

 
On July 23, 2009 at 10:21 AM , வந்தியத்தேவன் said...

கொண்டோடி அரசியலை இங்கே கலக்க நான் விரும்பவில்லை. சிம்பிளாச் சொல்றதெண்டால் அந்தாள் நல்ல தமிழறிஞர் அவ்வளவுதான்.

 
On July 24, 2009 at 8:32 AM , வலசு - வேலணை said...

//
நல்ல குருநாதர் நம்மைக் வருத்துவது
கொல்லவல்ல;கொல்லவல்ல
பொல்லா வினையறுக்க.
//
நல்ல குருநாதர் நம்மைக் வருத்துவது
கொல்லவல்ல, கொல்லவல்ல
குழி தோண்டிப் புதைக்க!
:-)

 
On July 25, 2009 at 5:32 AM , யசோதா.பத்மநாதன் said...

என்னவாயிற்று வலசு?
உங்கள் பதிவு பார்த்தும் நாளாயிற்று.

அரசியல் இங்கு வேண்டாம் நண்பர்களே. அரசியலிலும் காதலிலும் எல்லாம் நியாயம் தான் என்பார்கள். அவரவர் நியாயம் அவரவர்க்கு.

மனம் வருந்தற்க!

வெற்றி என்பது பெற்றுக் கொள்ள
தோல்வி என்பது கற்றுக் கொள்ள.

 
On July 25, 2009 at 9:29 AM , தமிழன்-கறுப்பி... said...

கொண்டோடி :)