Author: சினேகிதி
•1:45 PM


தோலங்கெட்டது, வெக்கங்கெட்டது, மானம் கெட்டது,ரோசம் இல்லாதது, சூடு சுரணையில்லாதது இதெல்லாம் ஒரே அர்தத்திலதான் வருமென்டு நினைக்கிறன்.

இந்தச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீங்கிளோ? இதுக்கு நேரடி அர்த்தம் என்னென்டு எனக்குத் தெரியாது ...தோலம் என்டால் என்ன? ஆனால் எங்கட ஊரில பரவலாப் பாவிக்கிற ஒரு சொல்லிது. இப்ப சகோதரங்கள் 2 பேர் சண்டை கட்டிப்புரண்டு சண்டை பிடிக்க அம்மாவோ அப்பாவோ 2பேருக்கும் நல்லா விளாசிப்போட்டு ஒராளோடை ஒராள் கதைக்கப்படாதெண்டு சொல்லி விட அடுத்த நிமிசமே சண்டை பிடிச்சதை மறந்திட்டுசேர்ந்து விளையாடினால்அங்கால அம்மாவோ அம்மம்மாவோ புறுபுறுப்பினம் தோலம் கெட்டதுகள் இப்பத்தான் 2ம் மல்லுக்கு நிண்டுதுகள் இப்ப பாருங்கோ ஒன்டும் நடக்காதது போல விளையாடுறதை.

இல்லாட்டப் பக்கத்து வீட்டுப்பிள்ளைட்ட நுள்ளு வேண்டிப்போட்டு வீட்ட வந்து அழுற பிள்ளைக்கு அறிவுரை சொல்லிப்போட்டு அம்மா நீ இனி அங்க விளையாடப்போவேண்டாம் என்டு சொல்லுவா. பிள்ளை அடுத்தநாளே போய் திரும்ப நுள்ளு வேண்டிக்கொண்டு வரும் அப்ப சொல்லுவா அம்மா தோலங்கெட்டது நேற்றெல்லே சொன்னான் போகதயெண்டு.

இல்லாட்டி வளர்ந்தாக்கள் ஒரு காலத்தில ஊருக்கே தெரியுற மாதிரிச் சண்டை பிடிச்சுப் போட்டுக் கொஞ்சகாலத்தில திரும்பக் கதைக்கத் தொடங்கினாலும் தோலங்கெட்டதுகள் உதுகளின்ர சண்டைக்க நாங்கள் விலக்குப்பிடிக்கப் போய் காயப்பட்டதுதான் மிச்சம்...இப்ப பாருங்கோ அவை இரண்டுபேற்ற குடும்பத்தையும்...ஒரே வாரப்பாடு இப்ப.

இல்லாட்டி இரண்டு பேர் சண்டைபிடிச்சு என்ர வீட்டு முத்தம் நீ மிரிக்கக்கூடாதெண்டு சவால் விட்டுப்போட்டு பிறகு எதுக்காகவோ வீட்டுப்படியேறி வந்தால் தோலங்கெட்ட ஜென்மம் எந்த முகத்தை வைச்சுக்கொண்டு எங்கட வீட்ட வருது என்று சொல்லுவினம்.

இல்லாட்டி வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ப்ளாக்ல எழுதிறேல்ல என்டுபோட்டு திரும்பவும் வந்து குதியன் குத்துறாக்களையும் சொல்லலாம்....
This entry was posted on 1:45 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On July 6, 2009 at 2:52 PM , வி. ஜெ. சந்திரன் said...

ஓம் மானம் கெட்ட, சூடு சுரணை இல்லாத எண்ட கருத்திலை தான் பாவிக்கிற.

 
On July 6, 2009 at 3:29 PM , rahulan said...

அது சரி வாரப்பாடு எண்டா என்ன?

 
On July 6, 2009 at 3:50 PM , VSK said...

தோலங்கெட்ட சென்மம் பலதும் இருக்கு!
உதுக்கெல்லாம் கவலை்ப்படாம, நடக்கணும் சினேகிதி!

 
On July 6, 2009 at 4:13 PM , கானா பிரபா said...

இண்டைக்குத் தான் இந்தச் சொல்லே கேள்விப்படுகிறேன், நானும் தோலம் கெட்டனான் :0

 
On July 6, 2009 at 7:56 PM , சினேகிதி said...

\\ஓம் மானம் கெட்ட, சூடு சுரணை இல்லாத எண்ட கருத்திலை தான் பாவிக்கிற\\

நான் சொன்ன சந்தர்ப்பங்கள் தவிர்ந்த வேற எப்ப இந்தச்சொல் பாவிக்கிறவை?

 
On July 6, 2009 at 7:59 PM , சினேகிதி said...

\\அது சரி வாரப்பாடு எண்டா என்ன?\\

அவை நல்ல வாரப்பாடு என்டால் அவை நல்ல கொந்தாயாம் என்டு அர்த்தம் :) அவை நல்ல ஒற்றுமையாய் சந்தோசமா ஒருத்தர் மற்றவைட வீட்டுக்குப்போய் வந்து கொண்டிருக்கினம். இதான் எனக்குத்தெரிஞ்ச வாரப்பாடு. மிச்ச அர்த்தம் வேறயாரும் வந்து சொல்லுங்கோ.

 
On July 6, 2009 at 8:00 PM , சினேகிதி said...

\\தோலங்கெட்ட சென்மம் பலதும் இருக்கு!
உதுக்கெல்லாம் கவலை்ப்படாம, நடக்கணும் சினேகிதி!\\

வாங்க சங்கர் அண்ணா...யாரந்த ஜென்மம்?

 
On July 6, 2009 at 8:01 PM , சினேகிதி said...

\\இண்டைக்குத் தான் இந்தச் சொல்லே கேள்விப்படுகிறேன், நானும் தோலம் கெட்டனான் :0\\

அய் பொய்தானே:) (முதலாவதுக்கு மட்டும்)

 
On July 6, 2009 at 8:51 PM , வாசுகி said...

//தோலங்கெட்டதுகள்//
இப்ப தான் இந்த சொல் கேள்விப்படுகிறன்.
கனக்க உதாரணம் தந்து விளங்கப்படுத்தி இருக்கிறீங்கள்.

மற்றும் படி பக்கத்து வீட்டு பிள்ளைகளோட சண்டை, உள் வீட்டு சண்டை எல்லாம்
நானும் போட்டது தான்.அதுவும் உந்த படத்தை பார்க்க நானும் தம்பியும் போட்ட சண்டை தான் ஞாபகம் வருகுது. கடைசி வரி எல்லோருக்கும் பொருந்திற மாதிரி எழுதி இருக்கிறீங்க.

 
On July 6, 2009 at 9:14 PM , சினேகிதி said...

வாசுகி உண்மையா நீங்களும் இப்பத்தான் கேள்விப்படுறீங்கிளா :

கடைசிவரி எனக்கு நானே எழுதிக்கொண்டது...உங்களுக்கும் பொருந்துமெண்டால் வேலையை முடிச்சிட்டு வாங்கோ.

 
On July 6, 2009 at 10:47 PM , வந்தியத்தேவன் said...

தோலங்கெட்டது எனக்கும் புதிய சொல்.

நுள்ளுறது, விலக்குபிடிப்பது பற்றி சிறுகுறிப்பு எழுதுங்கள் சிலருக்கு அவை தெரிந்திருக்காது.

//இல்லாட்டி வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ப்ளாக்ல எழுதிறேல்ல என்டுபோட்டு திரும்பவும் வந்து குதியன் குத்துறாக்களையும் சொல்லலாம் //

இதிலை நாங்கள் எல்லாம் தோலங்கெட்டதுகள் தான்.

 
On July 6, 2009 at 10:49 PM , வந்தியத்தேவன் said...

வாரப்பாடு விளக்கம் சரி. நல்ல ஒற்றுமையாக இருப்பதைத்தான் வாரப்பாடு என்பார்கள். சிலர் பள்ளிக்கூடத்திலை வாத்தியார்மாருடன் நல்ல வாரப்பாடாக இருப்பார்கள். இதனால் அவர்களின் சில தவறுகள் கண்டுகொள்ளப்படமாட்டாது. கொந்தாய் என்ற சொல் சிங்களச் சொல் என நினைக்கின்றேன். சில இடங்களில் சர்வசாதாரணமாக பாவிப்பது.

 
On July 6, 2009 at 10:53 PM , soorya said...

அன்பின் ஸ்நேகிக்கு,
யாழ்ப்பாண அகராதி..பாகம்1 , பாகம் 2.
தமிழ் மண் பதிப்பகமாக வந்திருக்கு.
அருமையான நூல்கள்.
அதிலை,
தோலம் ..என்றால்,
அசைவு, ஒருநிறை எண்டு போட்டிருக்கினம்.
அசைவில்லாதவள்(ன்)
நிறையில்லாதவள்(ன்)
ஆகவே...
தோலங்கெட்டதுகள் எண்டா...,
அசையாம நிக்கிற மாடு..அல்லது
பாரமேயில்லாத நாய் எண்டு திட்டியிருப்பினம்.
ஏதோ அவை மட்டும் திறம் எண்ட மாதிரி...
நன்றி.

 
On July 7, 2009 at 8:15 AM , சினேகிதி said...

\\
கனக்க உதாரணம் தந்து விளங்கப்படுத்தி இருக்கிறீங்கள்.\\


எழுதேக்க நான் எழுதுற உதாரணங்கள் சரியா என்ட சந்தேகம் இருந்துகொண்டே இருந்திச்சு அதான் நிறைய உதாரணம் எழுதினான்.

 
On July 7, 2009 at 8:17 AM , சினேகிதி said...

வந்தியத்தேவன் நீங்களுமா??? அப்ப என்ன இந்தச்சொல் எங்கட ஊருக்கு மட்டும் தனித்துவமானதா.

நுள்ளிறது , விலக்குப்பிடிக்கிறது பற்றி எழுதுறன்.

 
On July 7, 2009 at 8:19 AM , சினேகிதி said...

\\வாரப்பாடு விளக்கம் சரி. நல்ல ஒற்றுமையாக இருப்பதைத்தான் வாரப்பாடு என்பார்கள். சிலர் பள்ளிக்கூடத்திலை வாத்தியார்மாருடன் நல்ல வாரப்பாடாக இருப்பார்கள். இதனால் அவர்களின் சில தவறுகள் கண்டுகொள்ளப்படமாட்டாது. கொந்தாய் என்ற சொல் சிங்களச் சொல் என நினைக்கின்றேன். சில இடங்களில் சர்வசாதாரணமாக பாவிப்பது.\\

நாங்களும் சில ரீச்சர்மாரோட நல்ல வாரப்பாடுதான். அதுவும் பாலர் வகுப்பு ரீச்சரோட. ஆனால் தவறுகள் எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டதில்ல அவை...மற்ற ரீச்சர்மாரும் எங்களோட நல்ல வாரப்பாடான ரீச்சரட்ட சொல்லிவிட்டால் விசயம் வீடு வரைக்கும் வரும்.

 
On July 7, 2009 at 8:21 AM , சினேகிதி said...

சூர்யா விளக்கத்துக்கு நன்றி. அசைவற்றது என்டால் சடப்பொருள்...சடப்பொருளுக்கு வெக்கம் மானம் சூடு சுரணை இல்லைத்தானே:)

அப்பிடியே அந்தப்புத்தகம் எங்க கிடைக்கும் என்டு சொல்லுங்கோ.

 
On July 7, 2009 at 5:58 PM , நிவேதா/Yalini said...

//அவை நல்ல வாரப்பாடு என்டால் அவை நல்ல கொந்தாயாம் என்டு அர்த்தம் :)//

அதுசரி, கொந்தாயம் எண்டா என்ன?;-)

 
On July 8, 2009 at 1:38 AM , சுபானு said...

//இல்லாட்டப் பக்கத்து வீட்டுப்பிள்ளைட்ட நுள்ளு வேண்டிப்போட்டு வீட்ட வந்து அழுற பிள்ளைக்கு அறிவுரை சொல்லிப்போட்டு அம்மா நீ இனி அங்க விளையாடப்போவேண்டாம் என்டு சொல்லுவா. பிள்ளை அடுத்தநாளே போய் திரும்ப நுள்ளு வேண்டிக்கொண்டு வரும் அப்ப சொல்லுவா அம்மா தோலங்கெட்டது நேற்றெல்லே சொன்னான் போகதயெண்டு.


பழைய ஞாபகங்களை மீட்டிப்பார்க்க உதவியதற்கு நன்றிகள்...
ஆனால் நான் தோலங்கெட்டது என்றசொல்லைக் கேள்விப்பட்டதே கிடையாது.. ஏனையவற்றைக் கேட்டிருக்கின்றேன்..

 
On July 8, 2009 at 5:16 AM , சினேகிதி said...

\\//அவை நல்ல வாரப்பாடு என்டால் அவை நல்ல கொந்தாயாம் என்டு அர்த்தம் :)//

அதுசரி, கொந்தாயம் எண்டா என்ன?;-)
\\

கொந்தாய் என்டால் வாரப்பாடுதான் :)

 
On July 8, 2009 at 5:17 AM , சினேகிதி said...

\\பழைய ஞாபகங்களை மீட்டிப்பார்க்க உதவியதற்கு நன்றிகள்...
ஆனால் நான் தோலங்கெட்டது என்றசொல்லைக் கேள்விப்பட்டதே கிடையாது.. ஏனையவற்றைக் கேட்டிருக்கின்றேன்..\\

வாங்க சுபானு. யாருமே கேள்விப்படல்ல அப்பா நான் copy-rights போட்டு வைக்கப்போறன் இந்தச் சொல்லுக்கு.

 
On July 9, 2009 at 7:03 AM , வர்மா said...

என்னகொடுமை இது தோலங்கெட்டது தெரியாதாம். 30 வருடங்களூக்கு முற்பட்ட நாவல்களை தேடிப்படியுங்கள்.கே.டானியல்,தெணீயான்,செ.கணேசலிங்கம். சி.வன்னியகுலத்தின்புனைகதை இலக்கியம்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நாடகங்கள்.
அன்புடன்
வர்மா

 
On July 9, 2009 at 7:07 AM , வர்மா said...

என்னகொடுமை இது தோலங்கெட்டது தெரியாதாம். 30 வருடங்களூக்கு முற்பட்ட நாவல்களை தேடிப்படியுங்கள்.கே.டானியல்,தெணீயான்,செ.கணேசலிங்கம். சி.வன்னியகுலத்தின்புனைகதை இலக்கியம்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நாடகங்கள்.
அன்புடன்
வர்மா

 
On July 20, 2009 at 12:01 PM , சினேகிதி said...

என்ன கொடுமை இது வர்மா? இவையெல்லாம் பொய் சொல்லினம்.