Author: மொழிவளன்
•5:49 AM
இது அநேகமாக பெடியலிண்ர பேச்சு வழக்கிலேயே அதிகம் என நினைக்கின்றேன்.

மணிக்காய்

குணத்தில் நல்ல பெடியனாக இருந்தால், நல்லவனாக இருந்தால் “அவன் மணிக்காய் மச்சான்” என்று கூறுவோம்.

பேய்க்காய்

கடுங்கெட்டிக்காரனாக இருந்தால் “அவன் பேய்க்காய்” என்றும் கூறுவோம். அட உந்தக் கடுங்கெட்டிக்காரன் என்பதும் எமது பேச்சுவழக்கல்லே!

கடுங்கெட்டிக்காரன்

மறந்தே போனன், திறமைசாலி என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல் கடுங்கெட்டிக்காரன். இச் சொல் பொதுவாக எல்லோரிடமும் பயன்படும் சொல்.

உந்த

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.

அப்பு

“அப்பு” எனும் சொல் குறிப்பாக வயதில் முதிர்ந்தவர்களை பேச்சு வழக்கில் அழைக்கப் பயன்படுகின்றது. இது தாத்தா என்பதற்கு இணையானச் சொல். பாட்டி என்பதற்கு இணையானச் சொல்லாக “ஆச்சி” பயன்படுகின்றது.

எண்ரையப்பு, என்ரை செல்லையப்பு என்று தமது குழந்தைகளை கொஞ்சுவதற்கான சொல்லாகவும், வயதில் குறைந்தோரை பெரியோர் அழைக்கும் சொல்லாகவும் இந்த “அப்பு” எனும் சொல் வழக்கில் உள்ளது.

அப்பு ஆச்சியர் வாழ்ந்தப் பூமி இந்தப் பூமி தானடா!

ஒரு தாயகப் பாடலின் வரிகள். (நினைக்கும் போது நெஞ்சில் வலி பிறக்கிறது.)

மீண்டும் அடுத்தப் பதிவில்

அன்புடன் மொழிவளன் ஹொங்கொங்கிலிருந்து
This entry was posted on 5:49 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On June 11, 2009 at 7:12 AM , சயந்தன் said...

உந்த

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.//

உந்த என்பது பேச்சுமொழியற்ற இலக்கணச்சுத்தமான சொல் என நினைக்கிறேன்.

அ,இ,உ

அது இது உது

இந்த மூன்றும் சுட்டுச்சொல்லோ அல்லது சுடாத சொல்லோ எண்டு படிச்ச ஞாபகம். அதிலும் உ.. சுட்டுச்சொல் தமிழ்நாட்டில் வழக்கிலேயே ஒழிந்த பிறகு ஈழத்தில் மட்டும் வழக்கில் இருக்கிறதாகவும் யாரோ சொன்னவை.

பாலபண்டிதர் வசந்தன்தான் இந்த சந்தேகங்களை தீர்த்துவைக்கோணும்.

 
On June 11, 2009 at 7:19 AM , வசந்தன்(Vasanthan) said...

பே(ய்)க்காய் தொடர்பாக முன்பொருமுறை உரையாடியிருக்கிறோம்.

வசந்தன் பக்கம்: பேயும் நானும்

அவ்விடுகையிலும் பின்னூட்டங்களிலும் நிறைய விசயங்கள் அறிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

 
On June 11, 2009 at 8:09 AM , Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

 
On June 11, 2009 at 8:19 AM , வசந்தன்(Vasanthan) said...

தமிழிலக்கணத்தில் 'உ' சுட்டெழுத்தென்று படித்திருக்கிறோம். அவ்வகையில் உந்த, உவன், உவள், உது என்பவை இலக்கணப்படி சரியானவையே. ஆனால் பேச்சுவழக்கில் மட்டும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் அல்லது பேச்சுவழக்கை எழுதும்போது மட்டும் எழுதிக்கொள்கிறோம்.

சயந்தன் குறிப்பிட்டது போன்று 'உ'கரச் சுட்டெழுத்து ஈழத்தில் (மட்டும் தான் என்று அறுதியாகச் சொல்ல முடியுமா தெரியவில்லை) பரவலாகப் பயன்பாட்டிலுள்ளது. தமிழகத்தில் பரவலான பயன்பாட்டிலில்லை.

தமிழகத்தில் அழிந்துபோய் எம்மிடம் மீதமிருப்பதாக நான் முன்பு சொன்னது வினாவெழுத்துத் தொடர்பானது.
'ஓ'காரமும் 'ஏ'காரமும் சொல்லின் இறுதியில் வினாவெழுத்தாக வருமென்பது இலக்கண விதி.

"ஏ, யா முதலிலும்
ஆ, ஓ ஈற்றிலும்
ஏ இருவழியிலும் வினாவாகுமே"
என்று தமிழிலக்கணத்தில் படித்திருக்கிறோம்.

இதில் 'ஏ'காரம் இறுதியில் வினாவெழுத்தாக வரும்வகையில் தமிழகத்தார் கதைப்பதில்லை.
வருவியே? போவியே? செய்தனியே? அடிச்சனியே? ....
நாங்கள்தான் அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.

அதேபோல் 'ஓ'காரம் சொல்லின் இறுதியில் வினாவெழுத்தாக வருவதும் எம்மிடையேதான் பரவலாகப் பயன்பாட்டிலுள்ளது.
வருவியோ? வந்தனியோ? செய்தனியோ? போவீங்களோ?....

 
On June 11, 2009 at 10:26 AM , வந்தியத்தேவன் said...

சிலவேளைகளில் அழகான பெண்ணையும் மணிக்காய் என்போம் சிலர் மணிச்சரக்கு எனவும் அழைப்பார்கள்.

 
On June 13, 2009 at 4:46 AM , மொழிவளன் said...

/உந்த
- சயந்தன்

இஞ்சப்பாரடப்பா! உந்தப் பேச்செல்லாம் என்னிட்ட வச்சுக்காதேயும். இதில் உந்த என்பது “அந்த” என்பதற்கு இணையானச் சொல்.//

உந்த என்பது பேச்சுமொழியற்ற இலக்கணச்சுத்தமான சொல் என நினைக்கிறேன்.

அ,இ,உ

அது இது உது

இந்த மூன்றும் சுட்டுச்சொல்லோ அல்லது சுடாத சொல்லோ எண்டு படிச்ச ஞாபகம். அதிலும் உ.. சுட்டுச்சொல் தமிழ்நாட்டில் வழக்கிலேயே ஒழிந்த பிறகு ஈழத்தில் மட்டும் வழக்கில் இருக்கிறதாகவும் யாரோ சொன்னவை.//

விளக்கத்திற்கு நன்றி!

உதப்பற்றி இராம்கி ஐயாவும் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்ததாக நினைக்கிறன்.

கேட்டுப்பார்க்கவேணும்.

 
On June 13, 2009 at 4:50 AM , மொழிவளன் said...

/பே(ய்)க்காய் தொடர்பாக முன்பொருமுறை உரையாடியிருக்கிறோம்./

பார்த்த நான். கணக்க விசயங்கள் சொல்லப்பட்டிருக்குது.

நன்றி வசந்தன்.

 
On June 13, 2009 at 4:56 AM , மொழிவளன் said...

/அழகான பெண்ணையும் மணிக்காய் என்போம் சிலர் மணிச்சரக்கு எனவும் அழைப்பார்கள்/

ஓம்! அப்படியும் பயன்பாட்டில் இருக்கிறது தான்.

மணிச்சரக்கு எனும் சொல் அதிகமாக பாரஊர்தி ரைவர்மார் பாவிக்கிறதப் பார்த்திருக்கன்.

 
On June 13, 2009 at 6:48 PM , தமிழ் said...

அருமை

 
On June 13, 2009 at 8:46 PM , Anonymous said...

மணிக்காய், பேய்க்காய் தவிர ' காய் ' என்ற சொல்லும் பயன்படுத்துவோம்.
எமது பிரபல ஆசிரியர் ஒருவர் கடினமான கணக்குகளை சரியாக செய்தால் "நீங்கள் ஒரு காய் " என்று சொல்வார். காய் என்ற சொல் தமிழகத்திலும் பாவிப்பார்களா
என தெரியவில்லை.

 
On June 14, 2009 at 10:14 AM , வந்தியத்தேவன் said...

அனானி நண்பரே உங்கள் ஆசிரியர் பிரபல கணித ஆசிரியரா? அவர் தான் அடிக்கடி காய் என்ற வார்த்தை பயன்படுத்துவர். அவரது அகராதியில் காய் என்றால் கெட்டிக்காரன் என்று அர்த்தம்.